கண்டனம்
பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்த இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளுக்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது பழனி திருக்கோவில் ஊழியர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பலத்த காயமடைந்த பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதல் நடத்தியபழனி திருக்கோவில் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.